பலன் பார்த்து கடன் செய்யும் இவ்வுலகில்!
பிரதிபலன் பாரா மனம் ஒன்றும் இங்குண்டு!
தொல்லை கொடுப்பான்!
என் களிப்புற்ற வேலைகளை இரட்டிப்பாக்க!
செவி கொடுப்பான்!
என் சலிப்புற்ற வேலைகளை சொடுக்கெடுக்க!
வழி கொடுப்பான்!
திக்கற்ற வேளைகளில் திசை தேட!
மடி கொடுப்பான்!
ஒடிந்த சில வேளைகளில் ஓய்வெடுக்க!
மௌனம் கொடுப்பான்!
மாற்றுக் கருத்து பல சிந்திக்க!
மௌனம் கலைப்பான்!
சில மாறுதால்களுக்கு இடம் கொடுக்க!
காதல் இல்லாமல் கூட வாழ
இதயம் கற்றுக்கொண்டது!
ஆனால் நட்பில்லாமல் வாழ
மனம் கூட கற்கவில்லை!
இவனை நான் சந்தித்தது என் மூவேழு அகவையில்தான் !
என்னில் நான் சிந்தித்ததும் இதே அகவையில்தான்!
விதியை நான் நிந்தித்தும் இதே அகவையில்தான்!
ஈரேழு பிறவியிலும் இப்புவியில்
நான் பிறப்பெடுப்பேன்!
இவன் என் நண்பனாக வருவானாயில்!
Wednesday, October 14, 2009
Subscribe to:
Posts (Atom)